இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான விறுவிறுப்பை ஏற்படுத்திய போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்களினால் வென்று, ஒருநாள தொடரையும் 2-1 என கைப்பற்றியுள்ளது.
தனித்து நின்று இங்கிலாந்து அணியை காப்பாற்றிய சாம் குர்ரன், வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்ற போதிலும் இறுதி ஓவரில் சொதப்பியதால் அணி 322 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
போட்டி சுருக்கம்,
இந்தியா – 329 (48.2).
ரிஷப பாண்ட் 78, சிகார்த் தவான் 67, ஹார்டிக் பாண்டியா 64. மார்க் வூட் (37/3).
இங்கிலாந்து – 322/9 (50).
சாம் குர்ரன் 95*, டேவிட் மாலன் 50. சர்தல் தாகூர் (67/4).
இதன்படி இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-1 என்றும், ரி-20 தொடரை 3-2 என்றும், ஒருநாள் தொடரை 2-1 என்றும் இந்தியா கைப்பற்றியுள்ளது.