in , ,

பருந்தாகுது ஊர்க்குருவி; யாழ்ப்பாண அணிக்காக விளையாடும் விஜாஸ்காந்த்!

லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் 11வது போட்டியில் இன்று (04) யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி சார்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயதுடைய விஜயகாந்த விஜாஸ்காந்த் அறிமுகமாகியுள்ளார்.

2001ம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் திகதி பிறந்த விஜாஸ்காந்த் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் சிறந்த வலது கை சுழல் பந்து வீச்சாளராவார்.

இந்த வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரில் யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட விஜயகாந்த் விஜாஸ்காந்த், திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணியிலும் இடம்பிடித்தார்

குளத்தில் கழிவகற்றிய மாணவன் சேற்றில் சிக்கி மரணம்!

கொழும்பிடம் வீழ்ந்தது யாழ்ப்பாணம் அணி!