in ,

பறவைக் கூட்டத்துடன் மோதிய சரக்கு விமானம் கடும் சேதம்!!

துருக்கி சரக்கு விமானமான Turkish Airlines Cargo boeing 777-200F (TC-LJN) போயிங் 777 வகை சரக்கு விமானம் பறவைக் கூட்டத்துடன் மோதிச் சேதமடைந்தது.

துருக்கி இஸ்தான்புல் அட்டதுர்க் விமான நிலையத்திலிருந்து கஜகிஸ்தான் Almaty விமான நிலையத்துக்கு புறப்பட்டு மேலெழுந்த சிறிது நேரத்தில் பறவைக் கூட்டதுடன் மோதியதில் விமானத்தின் மூக்கு பகுதியும் (flight nose), உடல் பகுதியும் சேதமடைந்துள்ளன.

விமானி உடனடியாக இஸ்தான்புல் அட்டதுர்க் விமான கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்புகொண்டு விமானத்தை அவசரமாக இறக்க உதவி கோரினார்.

அனுமதி கிடைத்ததை அடுத்து விமானத்தில் இருந்த எரிபொருளினை கணிசமான அளவு வானில் வெளியேற்றி ( fuel dumping) செய்து விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.

வாழைச்சேனை பிரதான சந்தையில் அனைவருக்கும் அன்ரிஜன் சோதனை!

அத்துமீறிய இந்திய மீனவர்கள் யாழ் மீனவரை தாக்கினர்!