புதினம் தெரியுமோ?

பற்களை ஆரோக்கியமாக வைக்க சில குறிப்புகள்!

புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து, இதில் கால் பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும்.
வேப்பங்குச்சியினால் பல் துலக்கி வந்தால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
கிராம்பு, ஓமம், கற்பூரம் ஆகியவற்றை எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ளபல் ஈறுகளில் வைத்து சிறிது நேரத்திற்குப்பின் வாய் கொப்பளிக்க பல் ஈறு வீக்கம் தீரும்.
கொய்யா இலையை நன்றாக மென்று வெந்நீரில் வாய்கொப்பளிக்க பல் கூச்சம் விலகிவிடும்.
வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல்தேய்க்க வேண்டும். பல் தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
அடிக்கடி முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
பச்சை வெங்காயத்தை தினமும் நன்றாக மென்று சாப்பிட்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.
நெல்லிக்கனியை நன்றாக மென்று சாப்பிட்டுவர பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.
நீரில் துத்தி இலையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அந்த நீரில் வாயை கொப்பளித்து வந்தால் பல்ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.
வெந்நீரில் வெங்காயச் சாற்றைக் கலந்து அந்நீரில் வாய் கொப்பளித்து, பின்வெறும் வெங்காயச் சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறு வலி குறையும்.
கிராம்பை பொடி செய்து வைத்துக்கொண்டு, இதனை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். மற்றும் கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்புத் தூள் கலந்து, பற்களைநன்றாக தேய்க்க வேண்டும். ஈறுகளையும் விரலால் நன்றாக தேய்த்து வந்தால் ஈறுகள்பலம் பெறும்.
கடுக்காய் தூள் 100 கிராம், காவிக்கல் பொடி 50 கிராம், கிராம்புத்தூள் 10 கிராம், பொறித்த படிகாரத்தூள் 10 கிராம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதைக் கொண்டு காலை-இரவு இருவேளையும் துலக்கி வர பல் வலி, பல்கூச்சம், ஈறு நோய்கள் தீரும்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282