செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

பற்றைக்குள் கூடாரம் அமைத்து கொள்ளையிடும் கும்பல் கைது!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் கொள்ளை சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகி உள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள பற்றைக் காணிக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்து வந்தநிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் பொலிஸார் தெரிவித்துள்ளதாவது,

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 5 கொள்ளைச் சம்பவங்கள், பளை, தெல்லிப்பழை, இளவாலை பொலிஸ் பிரிவுகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபட்டமை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர்.

இந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவருக்கு சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் கொள்ளைக் குற்றச்சாட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுடையில் பற்றைக் காணிக்குள் தற்காலிக கூடாரம் அமைத்து மறைந்திருந்த போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கட்டுடை மற்றும் நவாலிப் பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் 4 பவுண் தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளன.

கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளனர். அவர்களிடம் 2 வாள்கள் மற்றும் 15 பவுண் நகைகள் உள்ளன என்று கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் இன்று வெளியேறுகிறது

Tharani

கடத்தல் வழக்கில் ஹிருனிகாவிற்கு அழைப்பாணை!

Tharani

யாழில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்

G. Pragas