செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

பல்கலை துறைத்தலைவர் உட்பட மூன்று பேர் பணி இடைநிறுத்தம்

யாழ்ப்­பா­ணப் பல்க­லைக் ­க­ழக மாண­ வர் நலச்­சே­வை­க­ளுக்­கென சீனத் தூத­ர­கத்­தால் ரூபா 43 இலட்­சம் நிதி­யு­தவி வழங்­கப்­பட்­டுள்­ளது. சீனத் தூது­வர் புல­மைப்­ப­ரி­சில் திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பட்ட இந்த நிதி­யு­த­வியை நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­ப­கல் 4 மணி­ய­ள­வில் கொழும்­பி­லுள்ள சீனத்­தூ­த­ர­கத்­தில் வைத்து இலங்­கைக்­கான சீனத் தூது­வர் சி சென்­ஹொங் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் பேரா­சி­ரி­யர் சி.சிறி­சற்­கு­ண­ரா­ஜா­வி­டம் கைய­ளித்­தார்.

இந்த நிகழ்­வில் சீனத்­தூ­து­வ­ரின் முதற் செய­லா­ளர் லீ ஜிங்ரே, யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர் நலச் சேவை­கள் பணிப்­பா­ளர் கலா­நிதி சி.ராஜ்­உ­மேஸ், சீனத்­தூ­து­வர் நிதி­யு­த­விக்­கான யாழ். பல்­க­லைக்­க­ழக இணைப்­பா­ளர் கலா­நிதி மு.தணி­கைச்­செல்­வன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

2016ஆம் ஆண்டு முதல் இலங்­கை­யி­லுள்ள பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு சீனத் தூது­வ­ரின் புல­மைப்­ப­ரி­சில் திட்­டத்­தின் கீழ் நிதி­யு­தவி பகிர்ந்து வழங்­கப்­பட்­டது. 2022 ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­கும், கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­கும் மட்­டுமே முழுத் தொகை­யும் பகிர்ந்து வழங்­கப்­பட்­டுள்­ளது.

சீனத் தூத­ர­கத்­தின் இந்த நிதி­யு­த­வி­யின் கீழ் மாண­வர்­க­ளுக்­கான மாதந்த உத­விப்­ப­ணம் உட்­பட பல நல­னோம்­புச் செயற்­றிட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன என்று பல்­க­லைக்­க­ழக நலச்­சே­வை­கள் பிரிவு அறி­வித்­துள்­ளது.

இதே­வேளை, சீனா­வி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­கும் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­கும் இடை­யில் ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட இருந்­த­வே­ளை­யில், யாழ். பல்­க­லை­யில் சீனத் தூது­வ­ரின் தலை­யீட்­டுக்கு யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டும் நிகழ்வு இடை­நி­றுத்­தப்­பட்­டது. அதே­வேளை, மேற்­படி நிதி உதவி வழங்­க­லுக்­கான சீனத் தூது­வ­ரின் பல்­க­லைக்­க­ழக விஜ­ய­மும் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266