கிழக்கு மாகாணம் செய்திகள்

பல்நோக்கு அபிவிருத்திச் செயலணியின் நேர்முகப் பரீட்சை

பல்நோக்கு அபிவிருத்திச் செயலணியின் ஊடாக வருமானம் குறைந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேர்முகப்பரீட்சை இன்று புதன்கிழமை ( 26) தொடக்கம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலகங்களில் 26.02.2020 இன்று புதன்கிழமை தொடக்கம் 29.02.2020 சனிக்கிழமை வரை நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர், வாழைச்சேனை பிரதேச செயலாளர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர், வாகரைப் பிரதேச செயலாளர், கிரான் பிரதேச செயலாளர், செங்கலடி பிரதேச செயலாளர் ஆகிய பிரிவுகளில் நேர்முகப் பரீட்சைக்கு பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

குறித்த நேர்முகப் பரீட்சையில் நடத்துனர்களாக பிரதேச செயலக உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளனர். (150)

Related posts

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்!

G. Pragas

கொழும்பு பொருளாதார கற்கைகள் நிறுவனத்தின் விருது வழங்கல்

Tharani

நிதி மோசடி; பொலிவியா சுகாதார அமைச்சர் கைது!

Tharani