நாட்டில் பல்பொருள் அங்காடிகளுக்கு பியர் விற்பனை உரிமம் வழங்கவேண்டும். நாடுமுழுவதிலுமுள்ள மதுபான நிலையங்கள் அனைத்தும் இரவு 10 மணிவரை திறக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அரச வருவாய் அதிகரிப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இரவு 9 மணியுடன் மதுபான நிலையங்கள் மூடப்படுவதால் மக்கள் கறுப்பு சந்தையில் மதுபானங்களை கொள்வனவு செய்ய நேரிடும். இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி இல்லாமற் போகின்றது.
நாட்டுக்கு தற்போது டொலர் தேவைப்படுகிறது. ஆனால் இரவு விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மனோபாவத்தில் மாற்றம் அவசியம் – என்றார்