in

பல பாடசாலைகளுக்குப் பூட்டு!! – கொரோனா தீவிரத்தால் அவசர முடிவு!!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளை இன்று தொடக்கம் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதிவரை அங்கு பாடசாலைகள் மூடப்படுகின்றன என்று எனக் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இந்த இரு மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவ ஆரம்பித்துள்ள பின்னணியிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சியம்பலாண்டுவ, மொனராகல, புத்தல ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த 15 பாடசாலைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் மூடப்பட்டுள்ளன.

கொரோனாத் தொற்று நிலைமையால் திருகோணமலை கவ்வி வலயப் பாடசாலைகளும் மீள் அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது.

சுழன்றடிக்கிறது கொவிட் அலை! – இன்று 892 பேர் தொற்றுடன் அடையாளம்!!

இலங்கையில் ஒரே நாளில் தூக்கியடித்த கொரோனா; இன்று 997