கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

பளையில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி – பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

குறித்த மாணவன் ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

பளைப் பகுதியைச் சேர்ந்த மாணவனை நான்கு நாட்களாகக் காணவில்லை என பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி கற்றுவந்த பளை, முள்ளியடியை சேர்ந்த ஆர்.அனோச் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயிருந்தார். இதுகுறித்து, பளை பொலிஸ் நிலையத்தில் கடந்த 28ம் திகதி மாணவனின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த மாணவன், பளை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதியவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவனுடைய பெற்றோர் கடந்த சில நாட்களாக தங்களுடைய உறவினர்களின் வீடுகளிலும் அவரைத் தேடியும் கண்டறியப்படாத நிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், பொலிஸாரும் மாணவனைத் தேடும் நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மாணவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

Related posts

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாஜக பேரணி

Tharani

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஹேமசிறி !

reka sivalingam

ஐதேகவின் முக்கிய எம்பி இராஜினாமா!

reka sivalingam