சினிமா செய்திகள்

பழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்!

தமிழ் திரையுலகின் பழம்பெரும் பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் இந்தியா – சென்னை, இராயப்பேட்டையில் வசித்து வந்த நிலையில் இன்று (19) காலை மாரடைப்பால் காலமாகியுள்ளார்.

தனது 87 வயதிலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளார். இவரது மனைவி நடிகை எம்.என்.ராஜம்.

கடந்த 1947ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் மற்றும் சுதர்சனம் ஆகிய படங்களில் நடித்து தனது திரையுலக வாழ்க்கையை ஏ.எல். ராகவன் தொடங்கினார்.

அவர் பாடிய ‘எங்கிருந்தாலும் வாழ்க’ போன்ற பாடல்கள் மிகப் பிரசித்தி பெற்றவை, விஜயகுமாரி என்ற படத்தில் குமாரி கமலாவுக்காக சிறுமி குரலிலும் ஏ.எல்.ராகவன் பாடியுள்ளார்.

தனது இசை பயணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார்.

Related posts

யாழில் இரு கிளைமோர் குண்டுகள் மீட்பு!

G. Pragas

முதுகெலும்பு இல்லாததால் பகிரங்க விவாதத்துக்கு சுமந்திரன் வரவில்லை!

G. Pragas

சமூக இடைவெளி பேணி சிறப்புற நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல்

G. Pragas