in ,

பவித்ராவுக்கு கொரோனா தொற்றியதற்கு நான் பொறுப்பல்ல – தம்மிக்க பண்டார

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா தொற்றுக்கு உள்ளானமைக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்று கொரோனா பானி தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சருக்கு இரண்டு ஆலோசனைகளை வழங்கியதாகவும், அதனை அவர் பின்பற்றவில்லை என்றும் பண்டார தெரிவித்துள்ளார்.

தொடர்புடையது – பிசிஆர் சோதனையிலும் பவித்ராவுக்கு உறுதியானது!

இதேவேளை இதற்கு முன்னர் தனது மருந்தை பயன்படுத்த இறைச்சி, மீன், புகைத்தல், மது என்பவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் பண்டார கூறியிருந்தார்.

இவரது கொரோனா பானி மருந்தை பவித்ராவே முதன்முதலாக பருகி, குறித்த மருந்துக்காக மக்கள் முண்டியடிப்பதற்கு காரணமானார்.

புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் லர்ரி கொரோனாவால் பலி!

இலங்கை 381; இங்கிலாந்து 98/2