செய்திகள் பிரதான செய்தி

பஸ் சில்லில் சிக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!

தனியார் பஸ்ஸின் டயர்களில் சிக்கி, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (20) மாலை 6 மணியளவில் மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பொலிஸ் பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றும் 40 வயதான அஜித் வீரசிங்க எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த இவர், மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் இருந்து சிவனொளிபாதமலைக்கு சிறப்பு கடமைகளுக்காக வருகை தந்ததாகவும், கடமைக்குத் வந்த முதல் நாளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அழகிப்பட்டம் வென்ற கரோலின் இலங்கையை வந்தடைந்தார்

reka sivalingam

குவைத்தில் துன்புறுத்தப்பட்ட பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

reka sivalingam

வவுனியாவிலும் தொண்டமானுக்கு அஞ்சலி

G. Pragas