செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பஸ்ஸில் பயணித்த இளைஞன் மீது வரணியில் வாள் வெட்டு!

தென்மராட்சி – வரணி, இயற்றாலை பகுதியில் வாள் வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இளைஞர் ஒருவர் மந்திகை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (25) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் முன்னாள் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஆ.சாந்தகுமாரின் மகனான சாந்தகுமார் சதுசன் (20-வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

மேசன் வேலைக்கு செல்லும் குறித்த இளைஞன் வேலை முடிந்து பேருந்தில் வரும் போது வரணி சிட்டிவேரம் அம்மன் ஆலயப்பகுதியில் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் ஐந்து பேர் குறித்த இளைஞனை பேருந்திலிருந்து இறக்கி வாளால் வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கைவிரல் இரண்டு துண்டாடப்பட்ட நிலையில், வலக் காலிலும் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் மந்துவிலுக்கு செல்லும் பாரதி வீதி சந்தியில் இளைஞனை போட்டுவிட்டு குறித்த கும்பலம் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உண்மைகளை போட்டுடைத்த ரஞ்சன் – வாயடைத்து நின்றது ஆளும் தரப்பு!

G. Pragas

யாழ் நகரை சுத்தம் செய்கின்றனர் பொலிஸார்

கதிர்

ஆண்டின் சிறந்த வீரராக மெஸ்ஸி

G. Pragas