in , ,

பஸ் – ரயில் மோதிய விபத்துக்கு நீதி கோரி போராட்டம்!

மன்னார் – தலைமன்னார், பியார் ரயில் கடவையில் பஸ் – ரயில் மோதிய விபத்துக்கு நீதி கோரியும், கடவைக்கான தடையை புதிதாக அமைக்க கோரியும் இன்று (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அண்மையில் இடம்பெற்ற பஸ் – ரயில் மேதிய விபத்தில் 14 வயது மாணவன் உயிரிழந்ததோடு, 25 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் குறித்த விபத்திற்கு நீதி கோரி குறித்த போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பியர் அரசின் தமிழ் கலவன் பாடசாலையில் இருந்து பியர் பகுதி ரயில் கடவை வரை பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.

இதன்போது அங்கு வந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், மன்னார் பிரதேச செயலாளர், ரயில்வே திணைக்கள அதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடிய போது, ரயில் கடவைக்கான தடையினை புதிதாக அமைத்து, அதற்கான பாதுகாப்பு ஊழியரை புதிதாக நியமிக்க கோரியும் குறிப்பாக வயோதிபர் இல்லாமல் நடுத்தர வயதுடையவர்களை கடமையில் ஈடுபடுத்தி, குறித்த ரயில் கடவையில் பொலிஸாரின் கண்காணிப்பையும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர்.

குறித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.

உருத்திரபுரீஸ்வரர் ஆலய அபகரிப்பை தடுக்க போராட்டம் ஆரம்பம்!

தாதியர்களை அடைத்து வைத்த கதிரியக்கவியலாளர் கைது!