செய்திகள் விளையாட்டு

பாகிஸ்தான் அணியை வெள்ளையடிப்புச் செய்தது இலங்கை!

பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு மூன்று ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளை கொண்ட தொடர்களில் மோதியிருந்தது.

ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்று கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் ரி-20 தொடரை இலங்கை அணி 3-0 என்று வெள்ளையடிப்புச் செய்து கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்த ரி-20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இன்று (09) இலங்கை அணி முதலில் ஆடி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனை விரட்டிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியயடைந்தது.

இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடியாக அரை சதம் கடந்த ஒசத பெர்னாண்டோ (78*) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் வனிது ஹசரங்க (21/3) விக்கெட்களை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஹரிஸ் சொஹைல் (52) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மொஹமட் ஆமிர் (27/3) விக்கெட்களை வீழ்த்தினார்.

ரி-20 அரங்கில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியை முன்னணி வீரர்கள் அற்ற நிலையில் இலங்கை அணி கைப்பற்றியிருக்கின்றது. அத்துடன், முதல்முறையாக ரி-20 அரங்கில் வெள்ளையடிப்பு முறையில் ரி-20 தொடரை கைப்பற்றிய முதல் தொடராக இது மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

என் ஆட்சியில் இப்படி நடக்க கூடாது! கோட்டா அதிகாரிகளுக்கு கட்டளை!

Tharani

2020 ஐ.பி.எல் அணிவிபரம்

கதிர்

கொரோனா சந்தேகம்; 255 பேர் கண்காணிப்பில்!

reka sivalingam