செய்திகள் பிரதான செய்தி

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதியான அத்மிரால் சபார் மகமூட் அபாஷி இன்று (27) ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

இலங்கை இராணுவ தளபதி மற்றும் பாகிஸ்தாஸ் கடற்படைத் தளபதிக்கு இடையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது பரஸ்பர ஆர்வம், கடல்சார் பிரச்சினைகள், கடல் வழித்தடங்களில் உள்ள சவால்கள் மற்றும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை பாதுகாப்பு படையினர்களுக்கு இடையிலுள்ள ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை கடற்படைத் தளபதி வயிஷ் அத்மிரால் பியல் டி சில்வா அழைப்பையேற்று இம் மாதம் 25 – 29 ஆம் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரைச் சந்தித்தார்.

பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாத் அலி மற்றும் துணைப் பணியாளர்கள், மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் குழுவினரும் இணைந்திருந்தனர்.

இவர் பாகிஸ்தான் கடற்படைத் தளபதியாக 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

இவர் பாகிஸ்தான் கடற்படையில் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் எகடமியில் இணைந்து கொண்டு டார்மவுத் பிரித்தானிய இராஜகிரிய கல்லூரியில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

கடற்படைத் தளபதி சிறந்த பயிற்சி மற்றும் கட்டளை பணிகளின் பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவரது கட்டளை நியமனங்களில் ஒரு எம்.சி.எம்.வி (பி.என்.எஸ் முஜாஹித்), டிஸ்ட்ராயர் (பி.என்.எஸ் கைபார்), 25 வது அழிக்கும் படை, கமாண்டன்ட் பாகிஸ்தான் கடற்படை எகடமி, கொமாண்டர் பாகிஸ்தான் கடற்படை, கொமாண்டர் கடலோர பகுதி, கொமாண்டர் லாஜிஸ்டிக்ஸ், டி.ஜி. CTF-150). ஃப்ளீட் டார்பிடோ மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு அதிகாரி, கடற்படை போர் செயல்பாட்டுத் திட்டங்கள், கடற்படைப் பணியாளர்களின் உதவித் திட்டங்கள் (திட்டங்கள்), தலைமை ஆய்வாளர் (கடற்படை) மற்றும் கடற்படைத் துறை துணைத் தலைவர் (செயல்பாடுகள்) அவரது முக்கிய பணியாளர் நியமனங்களில் சில முக்கிய பதவிகளையும், கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அட்மிரல் இஸ்லாமாபாத்தில் உள்ள கடற்படை தலைமையகத்தில் தலைமைத் தளபதியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் இராஜகிரிய அவுஸ்திரேலிய கடற்படை பணியாளர் கல்லூரியில் பட்டம் பெற்றவர். அவர் இஸ்லாமாபாத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஆயுதப்படை போர் பாடத்தில் தகுதி பெற்றுள்ளதுடன், இஸ்லாமாபாத்தின் காயிட்-இ-அசாம் பல்கலைக்கழகத்தில் போர் ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்ற அதிகாரியாவார்.

அவரது சிறப்பான சேவைகள் மற்றும் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில், அத்மிரலுக்கு நிஷான்-இ-இம்தியாஸ் (இராணுவம்), ஹிலால்-இ-இம்தியாஸ் (இராணுவம்) மற்றும் சீதாரா-இ-இம்தியாஸ் (இராணுவம்) பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவருக்கு ´கிங் அப்துல் அஜீஸ் மெடல் ஆஃப் எக்ஸலன்ஸ்´ (சவுதி அரேபியா) மற்றும் ´தி லெஜியன் ஆஃப் மெரிக் (துருக்கி) ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts

ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்: ஆனந்தசங்கரி

Tharani

130 கோடிக்கு தொலைத் தொடர்பு சாதன கொள்வனவு குறித்து விசாரணை

Tharani

நாட்டை கட்டியெழுப்புவதே ஒரே வழி – மஹிந்த

G. Pragas