உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

பாகிஸ்தான் பங்குச்சந்தையில் தாக்குதல்; ஐவர் பலி!

பாகிஸ்தான் – கராச்சியில் உள்ள பங்குச் சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பங்குச்சந்தை அலுவலகம் வழக்கம் போல் இன்று (29) பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

அப்போது ஆயுதங்களுடன் அங்கு புகுந்த பயங்கரவாதிகள், கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸாரும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில், பொதுமக்கள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.

Related posts

சிறிதரனுக்கு பொலிஸ் அழைப்பாணை!

G. Pragas

கழிவுகள் காெட்டப்பட்டுவதால் நாேயாளிகள் பாதிப்பு!

Tharani

வவுனியாவில் கோர விபத்து: இளம் தாய் பலி!

Tharani