சினிமா செய்திகள்

பாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி!

பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வதந்தியை அவரது மகன் மறுத்துள்ளார்.

பாடகி ஜானகி கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்தார். அணமையில் கூட ஒரு அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இவ்வாறான நிலையில் ஜானகி மரணமாகி விட்டார் என்று இன்று (28) மாலை சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டது.

இந்நிலையிலேயே அறுவை சிகிச்சைக்கு பின் ஜானகி நலமாக இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து வெளியாகிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஜானகியின் மகன் ஊடகங்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

Related posts

குளவி கொட்டியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி!

Tharani

யாழ் பல்கலையில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு!

Tharani

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

Tharani