in

பாடசாலைகளை திறப்பதற்குத் தேவையான முன்னாயத்தங்களை ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அறிவிப்பு.

நாட்டில் முடிந்தளவு விரைவாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்றும் பாடசாலைகளை திறப்பதற்குத் தேவையான முன்னாயத்தங்களை ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் வசதியற்ற குடும்பங்களில் உள்ள மாணவர்கள் கல்வி வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் கூறினார்.

நாட்டின் தொலைதூர பகுதிகளில், குறிப்பாக இணைய அணுகல் இல்லாத பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கு இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தற்போது மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்கள் தயாராக இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த சூழ்நிலையில், சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, விரைவில் பாடசாலைகளைத் திறப்பதே முதன்மை குறிக்கோள் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.

இதேவேளை இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழக்கம் போல் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே இந்த சூழலில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்குச் சென்று திறப்பதற்குத் தேவையான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு.

விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தின் அறிவிப்பு.