செய்திகள்

பாடசாலை அதிபர்களுக்கான அறிவுறுத்தல்கள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயற்படவுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் எதிர்வரும் சில மாதங்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யவேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விடுபட்டுள்ள கற்கைநெறிகளை முழுமையாக பூர்த்திசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்காக இந்த காலப்பகுதியை பயன்படுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

காலைநேர ஒன்றுகூடல், நாளாந்த நிகழ்வுகள் உள்ளிட்ட இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறும் பாடசாலை அதிபர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் பங்குபற்றுகின்ற உடற்பயிற்சி செயற்பாடுகள் சுகாதார வழிமுறைகளுடன் பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலை நேரங்களில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் வலியுறுத்தித் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலைகள் குறித்து நாளை வருகிறது சுற்றறிக்கை!

G. Pragas

வரலாற்றில் இன்று- (21.02.2020)

Tharani

மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வு

G. Pragas