செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பாடசாலை தொற்று நீக்கல் செயற்பாடு; முன்வருகிறது யாழ். மாநகர சபை!

யாழ் .மாநகரசபை நிர்வாக எல்லைக்குள் உள்ள பாடசாலைகளில் தொற்று நீக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ் மாநகரசபை தயாராக உள்ளது என மாநகர பதில் முதல்வர் து.ஈசன் அறிவித்துள்ளார்.

பாடசாலை அதிபர்கள் தமது கோரிக்கைகளை மாநகர முதல்வருக்கு எழுத்து மூலமாக எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.

தொற்று நீக்கல் மேற்கொள்ள வேண்டுமாயின் விண்ணப்பிக்கின்ற ஒவ்வொரு பாடசாலைகளும் 25 ஆம் திகதி்க்கு முன்னர் தமது பாடசாலைகளை சிரமதானம் செய்து வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். சிரமதானம் செய்யப்படாத பாடசாலைகளுக்கு கிருமித் தொற்று நீக்கல் மேற்கொள்வது சிரமமாகும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

உரிய முடிவுத் திகதிக்கு முன்னர் கிருமித் தொற்று நீக்கலுக்காக விண்ணப்பிக்கின்ற பாடசாலைகளின் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்படுகின்ற கால ஒழுங்கில் பதிவு செய்யப்பட்டு தொற்று நீக்கல் மேற்கொள்ளப்படும்.

மேலதிக விபரங்களுக்கு யாழ் மாநகர முதல்வர் அலுவலகம் மற்றும் மாநகர பதில் முதல்வரை தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மோதல் சம்பவம்; அறுவருக்கு மறியல்

G. Pragas

மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நிறைவு

reka sivalingam

மதுசாலை உடைத்து மதுக் கொள்ளை!

G. Pragas