சினிமா செய்திகள்

பாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் கொங்கனி இசையமைப்பாளரும்; பாடகருமான ஜெர்ரி பஜ்ஜோடி. இவர், சினிமா பாடல்கள் தவிர, பக்திப் பாடல்களையும் மிகப் பிரமாதமாக மேடைகளில் பாடுவார். இவரது பாடலை கேட்க, இவர் எங்கு மேடை போட்டுப் பாடினாலும், ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வருவர்.

அந்த வகையில், மங்களூரில் கடந்த செவ்வாயன்று, விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, பேஜாய் என்ற இடத்தில், விநாயகரைப் போற்றி எழுதப்பட்ட பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடுமென மேடையில் சரிந்து விழுந்தார்.

உடனே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பார்வையாளர்கள் சிலரும் சேர்ந்து, ஜெர்ரி பஜ்ஜோடியை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர், திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்து போய் விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அவரது குடும்பத்தினரும்; ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர்.

Related posts

பிரதமருக்கும் விசேட மருத்துவர்களுக்கும் இடையில் சந்திப்பு

Tharani

சம்பந்தன் மற்றும் ஹக்கீமுக்கு அடிபணிய மாட்டோம் – நாமல்

G. Pragas

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 2வது நாளாக கர்தினால் சாட்சியம்

Tharani

Leave a Comment