கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

பாண்டிருப்பில் புலம்பெயர் தொழிலாளர் தினம்

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தொழிலாளர் தின நிகழ்வுகள் நேற்று (9) கல்முனை பாண்டிருப்பு கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

பாண்டிருப்பு, பெரியநீலாவணை கிராமங்களில் செயற்படும் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சுவாட் அமைப்பின் அனுசரணையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு பாண்டிருப்பு புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத் தலைவர் எஸ்.சுகிர்தராணி தலைமையில் முற்பகல் நடைபெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் அதிகாரி, சமூர்த்தி தலைமை முகாமையாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், கிராம உத்தியோகஸ்த்தர்கள், சுவாட் அமைப்பினர், புலம்பெயர் தொழிலாளர் அமைப்பினர், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது சிறுவர்களின் கலை நிகழ்விகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 43 ஆகியது!

G. Pragas

அதிக விலைக்கு இறைச்சி விற்பனை செய்தால் முறையிடவும்!

G. Pragas

“திருடா திருடா” தோல்விக்கான பாடல் என்று மணிரத்னம் கூறிய பாடல் எது?

G. Pragas