செய்திகள்

பாதுகாப்பு அமைச்சு இல்லாமல் இலங்கை

புதிய அமைச்சரவை பதவியேற்றதும் வெளியிடப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அமைச்சுக்களின் பட்டியலில் பாதுகாப்பு அமைச்சு இடம்பெறவில்லை. பாதுகாப்பு அமைச்சராகவும் தானே பதவி வகிப்பேனென ஜனாதிபதி தமது முதல் உரையில் தெரிவித்திருந்தார். எனினும், அவர் பாதுகாப்பு அமைச்சை இன்னமும் பொறுப்பேற்கவில்லை.

இதனால், பாதுகாப்பு அமைச்சரில்லாமல் பாதுகாப்புச் செயலராகவுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவே பாதுகாப்பு அமைச்சை வழிநடாத்துகிறார்.

இதேவேளை, 19 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் ஜனாதிபதி பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்க முடியாது. இந்த அரசியலமைப்பு நெருக்கடியினாலேயே பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு வேறெவரையும் நியமிக்காமல் தானும் பொறுப்பேற்காமலிருக்கிறார் ஜனாதிபதி எனத் தெரியவருகிறது

Related posts

கடலலையில் சிக்கிய தெனியாய இளைஞனை காணவில்லை!

G. Pragas

இம்மாதம் எரிபொருள் விலைத் திருத்தம் இல்லை!

G. Pragas

நிதி நிறுவன மோசடிகள் குறித்த அறிக்கை நாளை கையளிக்கப்படும்

Tharani