செய்திகள் யாழ்ப்பாணம்

பாதுகாப்பு செயலாளர் கூறியதை ஏற்க முடியாது – சிவஞானம்

வட மாகாணத்தில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாதென்று, பாதுகாப்புச் செயலாளர் கூறிய கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடமாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

நாங்கள் அனைத்து இராணுவத்தினரையும் வெளியேறுமாறு கூறவில்லை. மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுவே தற்போதுள்ள பிரச்சினை.

பாதுகாப்புகளைக் காரணங்காட்டி, தொடர்ந்து பொதுமக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. – என்றார்.

Related posts

குழந்தையை தாக்கிய தாய் கைது!

கதிர்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்; 3 ஆண்டுகள் நிறைவு

reka sivalingam

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

reka sivalingam