சினிமா செய்திகள்

பாய மறுத்த தோட்டா

கவுதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில், 2016 ல் தொடங்கப்பட்ட படம், எனை நோக்கி பாயும் தோட்டா. சம்பளப் பிரச்னை, கடன் என, பல காரணங்களால், வெளியீடு தள்ளி போனது. இந்நிலையில், நாளை(செப்.,6) படம் வெளியாகும் என, கவுதம் மேனன் அறிவித்தார்.

ஆனால், அவருக்கு கடன் கொடுத்தவர்களில் சிலர், நீதிமன்றத்தை நாடி உள்ளனர். மேலும் தனுஷிற்கு பேசிய சம்பளத் தொகையும் செட்டில் செய்யப்படவில்லை. இதன் காரணமாக படம் நாளை வெளியாகவில்லை.

இதற்கு பதில் ஏற்கனவே ரிலீஸிற்கு தயாராக இருந்த சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், சித்தார்த் நடித்துள்ள ‛சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் நாளை ரிலீஸாகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சில் நடக்கின்றன.

‛பிச்சைக்காரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சசி இயக்கி உள்ள படம் இதுவாகும். ஜிவி பைக் ரேஸராகவும், சித்தார்த் போக்குவரத்து காவலராகவும் நடித்துள்ளனர். படத்தின் ஆக்ஷன், காதல், எமோஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கலந்துள்ளன.

Related posts

விசேட அமைச்சரவையின் முடிவு! உப குழு நியமனம்

G. Pragas

சஜித்துக்காக வவுனியாவில் வெடி வெடித்து ஆரவாரம்!

G. Pragas

பூஜித் ஜெயசுந்தர சற்றுமுன் கைது!

G. Pragas

Leave a Comment