செய்திகள்

பாலிதவிற்கு மாலை அணிவித்து வரவேற்பு

உயிரிழந்த தமிழர் ஒருவரது உடலத்தை தனியார் தோட்டம் ஒன்றில் இருந்த மயானத்தில் புதைப்பதற்கு எதிராக தோட்ட உரிமையாளரால் நீதிமன்றத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட தடைக்கு எதிராகச் செயலாற்றி, நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி, குறித்த உடலத்தை தானே முன்னின்று இறுதிக்கிரியைகளை நிறைவேற்றி அடக்கம் செய்த நிலையில் பாலித தேவரபெரும எம்பி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஏழு நாட்கள் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்து, இன்றைய தினம் மத்துகம நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பிரதியமைச்சர் பாலித தேவப்பெரும அவர்கள் நீதிமன்ற வளாகத்திலிருந்து மக்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொன்னாடைகள் போர்த்தப்பட்டு அழைத்துச் செல்லப்படுள்ளார்.

Related posts

சிலை உடைப்பு: சந்தேகநபர்கள் 29 பேருக்கும் விளக்கமறியல்

Tharani

பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்ய தீர்மானம்

Tharani

நாயாற்றில் மூழ்கி தந்தை பலி! மகனை காணவில்லை

G. Pragas