செய்திகள்

பாலிதவை விடுதலை செய்யக் கோரி ஹட்டனில் கவனயீர்ப்பு

களுத்துறையில் தமிழ்த் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி ஹட்டன் – என்பீல்ட், நோனா தோட்டத்தில் இன்று (15) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நோனாத் தோட்டத்தில் ஸ்ரீ செல்வ விநாயக ஆலயத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவண்ணம் காலை 11 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது உண்மையாக சேவை செய்யும் தலைவர்களை இணங்காண்போம், ஏமாற்றுத் தலைவர்களை வெளியேற்றுவோம், பாலித விடுதலைக்கு இறை ஆசி வேண்டி பூஜை செய்வோம் போன்ற பதாதைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது ஐம்பதற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு செல்வ விநாயகர் ஆலயத்தில் சிறது தேங்காய்கள் உடைத்து விசேட பூஜைகளிலும் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிஐடி விசாரனையில் வெள்ளை வான் சாரதி விவகாரம்

G. Pragas

கோத்தாவிற்கு ஊடகம் முன் தோன்றத் தடை!

G. Pragas

அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கு சந்தர்ப்பம்

Tharani