செய்திகள்

பாவனைக்கு பொருத்தமற்ற தேயிலை தொகை மீட்பு!

வெள்ளம்பிட்டி – வென்னவத்த பிரதேசத்தில் உள்ள களஞ்சிய அறை ஒன்று சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் பாவனைக்கு பொருத்தமற்ற 17 ஆயிரத்து 634 கிலோ கிராம் தேயிலை தொகை கைப்பற்றப்பட்டுள்ளன.

காவற்துறை அதிரடி படையினர் இவ்வாறு சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மீள் ஏற்றுமதி செய்ய இருந்த 12 ஆயிரத்து 300 கிலோ கிராம் தேயிலை தொகை இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆயிரத்து 334 தேயிலை தொகை ஸ்ரீ லங்கா தேயிலை சபை அனுமதிபத்திரத்திற்கு சட்டவிரோதாமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், தேயிலை தொகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனி உள்ளிட்ட சில பொருட்களுக்கு பண்டவரி விதிப்பு!

Tharani

அக்கரப்பத்தனை ஆற்றை அகலப்படுத்தும் பணி ஆரம்பம்!

reka sivalingam

தமிழர்கள் கடத்தல்; முக்கிய தளபதிகளை விடுவிக்க அறிவுறுத்தல்

G. Pragas