செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பிரச்சினைகளை தீர்க்க கோரி யாழ்பல்கலை பாதுகாப்பு ஊழியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுக் காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற களவுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்று காலப்பகுதியில் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தாங்கள் பணியாற்றிய போதிலும் தங்கள் மீது இவ்வாறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொழில் சங்கம் முன்வைத்துள்ளதாக பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இதனைக் கண்டித்து நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவோரை தவிர ஏனைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

வரலாற்றில் இன்று- (16.06.2020)

Tharani

பனாகல காட்டில் தீ!

G. Pragas

மொனராகலையில் பெய்த ஐஸ் கட்டி மழை!

G. Pragas