செய்திகள் பிராதான செய்தி

பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் எதிர்வரும் 12ம் திகதி காலை 9.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என பிரதமருக்கு இன்று (09) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொலைநகல் மூலமாக பிரதமர் அலுவலகத்திற்கும் அலரி மாளிகைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நாளை அது நேரடியாக கையளிக்கப்படவுள்ளது.

விவசாய அமைச்சின் கட்டடமொன்றைக் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக சாட்சியமளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

தமிழ் பயங்கரவாதிகள் என்று எம்மிடேயே யாருமில்லை! – விக்கி

G. Pragas

றெஜினா கொலை பகுப்பாய்வு – சந்தேக நபர்களுக்கு தொடர்பு

G. Pragas

தாக்குதல் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் கைது

G. Pragas

Leave a Comment