செய்திகள் பிரதான செய்தி

பிரதமரை சந்தித்த வடமாகாண ஆளுநர்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் ஆகியோரும் இடையில் இன்று (29) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை வழமைக்கு கொண்டு வருதல் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

Related posts

வரலாற்றில் இன்று

Tharani

இன்றைய நாணய மாற்று விகிதம்

Tharani

பௌத்த மத குருக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது!

reka sivalingam