செய்திகள்

பிரதமர் பதவியை கைவிடமாட்டேன்! மஹிந்த ராஜபக்ச விடாப்பிடி!

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச அரசியலிலிருந்து ஓய்வுபெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்சவுக்கு வழங்கவுள்ளார் என்று நாட்டில் தகவல் பரவி வருகிறது.

இந்தநிலையில், ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள பிரதமர், நாட்டில் காணப்படும் ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் பல வதந்திகளை பரப்பிவருகின்றனர். நாட்டின் புத்திஜீவிகள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஜனநாயக சுதந்திரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது நியாயமில்லை – என்று தெரிவித்துள்ளார்

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,196