இந்திய செய்திகள்செய்திகள்

பிரதமர் மோடியின் ருவிற்றர் ‘ஹேக்’

பிரதமர் மோடியின் ருவிற்றர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது என இந்தியப் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் ருவிற்றர் பக்கம் PM @narendramodi என்ற பெயரில் உள்ளது. இதில் பல மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட ருவிற்றர் கணக்கு ஹேக்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது.

ருவிற்றர் நிறுவனத்திடம் உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு பிரதமரின் ருவிற்றர் கணக்கு மீட்கப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ளவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,939