in ,

பிரபாவின் பிறந்தநாள் படத்தால், தாதிய கல்லூரிக்கள் கைகலப்பு!

யாழ்ப்பாணம் தாதிய கல்லூரியில், தலைவர் பிரபாகரனுக்காக கேக் வெட்டும் ஒளிப்படம் பகிரப்பட்டமையால் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையே முரண்பாடு உருவாகி அடிதடி ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

லண்டனில் இலங்கைத் தூதரகம் முன்பாக முன்னர் போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை இராணுவ அதிகாரி ஒருவர் கழுத்தில் கையை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுக்கும் ஒளிப்படத்தை கடற்படையில் இணைந்து தாதிய பயிற்சி பெறும் மாணவர் ஒருவர் கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமன்று தமிழ் மாணவர்களுக்கு அனுப்பினார் என்றும், பதிலுக்க தமிழ் மாணவர்கள், பிரபாகரனின் பிறந்தநாளான நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டிய ஒளிப்படத்தை அந்த மாணவருக்கு அனுப்பினர் என்றும் அதனால் நேற்று அங்கு இருதரப்புக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது,

ஆரம்ப கட்டவிசாரணையில், தமக்குள் கருத்து முரண்பாடு இருந்ததாகவும், அதனால் இன்று (நேற்று) கைகலப்பாக மாறியதாகவும் குறித்த தரப்பினர் தெரிவித்தனர். மேலும் இரு தரப்பினரிடமும் பிழை இருப்பதை ஒத்துக்கொண்டமையுடன், விசாரணைக்கும் ஒத்துழைக்கின்றோம் என்று தெரிவித்தனர். இரு தரப்பும் கருத்துமுரண்பாட்டை விடுத்து சுமுகமாக செல்கின்றோம் என்று கூறியமையால், பல மாணவர்கள் கல்விகற்கும் இடமென்பதால் நான் சமாதானமான முறையில் மாணவர்களை அனுப்பிவைத்தேன். – என்றார்.

மேதகுவின் பிறந்தநாளில், சிவாஜி வழங்கிய ‘கேக்’

உணவகத்தினுள் பளை பொலிஸ் பொறுப்பதிகாரியின் மூர்க்கத்தனமான செயல் !