செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பிரித்தானிய தூதர்களை சந்தித்தார் சுரேஸ்

பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர்.

இன்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மாகாணத்தில் இருக்கக் கூடிய பாதுகாப்பு நிலவரங்கள், தொடர் கைதுகள், இராணுவ பிரசன்னங்கள் போன்றவை தொடர்பாகவும் தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாகவும், தமிழ் மக்களினுடைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts

குரலுக்கு வளம் – 2020: ஒலிபரப்பாளராவதற்கு வாய்ப்பு

Tharani

போதை பொருளுடன் மலைக்கு சென்ற 20 பேர் கைது!

G. Pragas

பாலிதவை விடுதலை செய்யக் கோரி ஹட்டனில் கவனயீர்ப்பு

G. Pragas