சினிமா செய்திகள்

பிற்போடப்பட்டது அனுஷ்காவின் “சைலன்ஸ்”

அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள ’சைலன்ஸ்’ படத்தின் வெளியீட்டுத் திகதி ஏப்ரல் 2 என மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ‘சைலன்ஸ்’ திரைப்படம் ஜனவரி 31ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பெப்ரவரி 20ம் திகதி வெளியாகும் என மாற்றப்பட்டது. தற்போது படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழு மீண்டும் தள்ளிவைத்துள்ளது.

அதன்படி இப்படம் ஏப்ரல் 2-ந் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த திரைப்படத்தில் அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

முன்பள்ளிகள் ஆரம்பிப்பு தொடர்பான அறிவிப்பு!

G. Pragas

தடை செய்யப்பட்ட 800 கைபேசிகள் கைப்பற்றல்

Tharani

ஹெரோயினுடன் வியாபாரி உட்பட இருவர் கைது!

G. Pragas