செய்திகள் பிரதான செய்தி வவுனியா

பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்; தானும் தற்கொலைக்கு முயற்சி

வவுனியா – நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பு பகுதியில் கணவன் விபத்தில் இறந்த சோகத்தில் தாய் ஒருவர் தனது இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன்போது இரு குழந்தைகளும் பலியாகியுள்ளன.

அண்மையில் விபத்தில் மரணித்த அதே பகுதியைச் சேர்ந்த உதயன் என்பவருடைய மனைவி இன்று (29) மதியம் தனது நான்கு வயது பெண் பிள்ளையையும் மற்றும் இரண்டரை வயது ஆண் பிள்ளையையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றுள் குதிக்க முயன்ற நிலையில் அயலவர்களால் தாய் தடுக்கப்பட்டு் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஆயினும் மகன் உ.பவித்திரன் (2) கிணற்றுக்குள்ளே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிருடன் மீட்கப்பட்ட மகள் உ.சந்தசா (4) அவசர சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் வவுனியா கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.

Related posts

பொறுப்புகூறல் அவசியம் – இலங்கையிடம் வலியுறுத்தல்

G. Pragas

சர்வதேசம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கும் உதவ வேண்டும்

Tharani

இந்தியா செல்ல முயன்ற எட்டுப் பேர் கைது

G. Pragas