செய்திகள் பிரதான செய்தி

பிள்ளையானின் வழக்கு காணாெளி மூலம் ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக நீதிபதியின் ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணையை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்தார். 

இதற்கமைய, இன்று (02) காணொளி அழைப்பின் ஊடாக மட்டக்களப்பு குற்றவியல் சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசனால் வழக்கு எதிர்வரும் 11 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Related posts

கொழும்பு ஆனந்தா-நாலந்தா கிரிக்கெட்; சமனிலையில் முடிவு!

Bavan

வவுனியாவில் வாள் வெட்டு – அறுவர் காயம்!

G. Pragas

புலம்பெயர் தமிழர்களின் கொரோன மரணங்கள்; துயருற்ற துரையர்

G. Pragas