கிழக்கு மாகாணம்செய்திகள்

பிள்ளையார் கோயிலில் திடீரெனப் புத்தர் சிலை!

திருகோணமலை- மூதூர், 64ஆம் கட்டை மலையடிப் பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் சிலைக்கு அருகில், புத்தர் சிலை ஒன்று திடீரென வைக்கப்பட்டதால் நேற்றுப் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாதவர்களால் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. காலையில் புத்தர் சிலையை அவதானித்த பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அந்தப் பகுதிக்கு வந்த மூதூர் கொட்டியராம விகாராதி மக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் சற்றுப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அந்தப் பகுதி மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஆயத்தமான நிலையில், பொலிஸார் புத்தர் சிலையை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

மலையடிப் பிள்ளையார் ஆலயம் நீண்டகால வரலாற்றைக் கொண்டது என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர். புத்தர் சிலையை அந்த இடத்தில் நிறுவியவர்கள் யார் என்பது கண்டறியப்படவில்லை. இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,196