in ,

பீபா உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

தென் கொரியாவில் நடைபெறவுள்ள கத்தார் 2022 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தகுதிகாண் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோல்காப்பாளர் சுஜான் பெரேரா தலைமையிலான இலங்கை அணியின் உதவித் தலைவர்களாக முன்னாள் தலைவர் கவிந்து இஷானும் புதிதாக அஹ்மத் வசீம் ராசீக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 22 வீரர்களைக் கொண்ட குழாத்தில் வெளிநாடுகளில் விளையாடும் இலங்கை வம்சாவளியினர் மூவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் அணி பலப்படும் என அணித் தலைவர் சுஜான் பெரேரா தெரிவித்தார்.

இங்கிலாந்தில் விளையாடிவரும் மேர்வின் ஹெமில்டன், குவீன்ஸ் பார்க் ரேஞ்ர்ஸ் அணி வீரர் டிலொன் டி சில்வா இலங்கை வம்சாவளியினராவர். ஜெர்மனியில் பல வருடங்களாக விளையாடியவந்த வசீம் ராஸீக் தற்போது நாடு திரும்பியுள்ளதுடன் அப்பன்ட்றி லயன்ஸ் கழகத்துக்காக விளையாடி வருகின்றார்.

இவர்களில் தற்போது இங்கிலாந்தில் இருக்கும் டிலொன் டி சில்வா, நேரடியாக தென் கோரியா சென்ற இலங்கை அணியுடன் இணைந்துகொள்வார்.

நியூ யங்ஸ் வீரர் டக்சன் பியூஸ்லாஸ் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இவர் மாலைதீவுகளில் தொழில்சார் கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடியவராவார்.

இக் குழுவில் இடம்பெற்ற வட கொரியா, கொரோனா தொற்று நோயைக் காரணம் காட்டி விலகிக்கொண்டதால், இலங்கைக்கு இன்னும் இரண்டு போட்டிகளே எஞ்சியுள்ளன.

லெபனானை ஜூலை 5ஆம் திகதி சந்திக்கும் இலங்கை, 4 நாட்கள் கழித்து தென் கொரியாவை எதிர்த்தாடும்.

கடும் காய்ச்சலுக்குள்ளான சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்

விபத்தில் 6 விபத்துக்கள் மற்றும் 7 பேர் பலி!