in , , ,

புகழ்பூத்த வீரர் நினைவுத் தொப்பி வழங்கி சங்ககாராவுக்கு ஜசிசி கௌரவம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியிலில் அண்மையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குமார் சங்கக்காரவுக்கு நினைவு தொப்பி வழங்கப்பட்டது.

இங்கிலாந்தின் சவுத்ஹம்ப்டன், ஏஜியஸ் போல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 3ஆம் நாளன்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு ஐசிசி புகழ்பூத்த வீரருக்குரிய நினைவுத் தொப்பி வழங்கப்பட்டது.

நினைவு தொப்பியுடனான கட்டமைக்கப்பட்ட படத்தை குமார் சங்கக்காரவிடம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்ளாள் தலைவரும் சமகால நேர்முக வர்ணனையாளருமான சுனில் காவஸ்கர் வழங்கினார்.

ஐந்து வெவ்வேறு சகாப்தங்களின்போது பிரகாசித்த 10 முன்னாள் கிரிக்கெட் விற்பன்னனர்கள் ஐசிசியின் புகழ்பூத்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் கடந்த 13ஆம் திகதி இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.

திருமலையில் வயல் பகுதியில் கைக்குண்டு மீட்பு

உலக நாடுகள் ஆதரவுடன் நடந்த சர்வதேச யோகா தினம்