செய்திகள்

சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகத்தில் மோசடி!

மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதிப் பத்திர விநியோக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது என்று போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மோட்டார் வாகன பதிவுத் திணைக்கள அதிகாரிளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனத்தினால் நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று, ஒப்பந்த காலப்பகுதியினுள் இந் நிறுவனம் ஒப்பந்தத்திற்கமைய செயற்படாமையினால் அரசாங்கத்திற்கு சுமார் 400 கோடி ரூபா வரை நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது. 

அதன்படி, இந் நிறுவனம் தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

விசாரணைகளின் பின்னர் நிறுவனம் இலங்கையினுள் செயற்படுவதை இடைநிறுத்த தேவையான ஆவணங்களை பட்டியலிடுவதற்கும் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

Related posts

11 தமிழர்கள் கடத்தல்; மேஜர் அஜித் பிரச்சன்ன கைது!

G. Pragas

சீரற்ற காலநிலையினால் 15 மாவட்டங்களில் 9016 பேர் பாதிப்பு

Tharani

ஷேன் வார்னின் தொப்பி 5 கோடிக்கு ஏலம்!

Tharani

Leave a Comment