செய்திகள் பிரதான செய்தி முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பு நகரில் வேட்பாளர் உட்பட நால்வர் கைது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுக்களை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒருவரும் கட்சியின் ஆதரவாளர் ஒருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவருமாக நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

Related posts

சென் ஜாேன்ஸ் களத்தடுப்புக்கு தீர்மானம்!

Tharani

இந்த அரசு தேசிய பாதுகாப்பிற்கு முக்கியம் வழங்கவில்லை – கோத்தாபய

G. Pragas

துப்பாக்கிகளை லோட் செய்து அச்சுறுத்தினர்- சிவாஜி தெரிவிப்பு

reka sivalingam