செய்திகள் பிரதான செய்தி

புது வருடத்தை எதிர்பார்த்து பொதுத் தேர்தல்?

எதிர்வரும் தமிழ் -சிங்களப் புத்தாண்டு காலப்பகுதி நிறைவடைந்ததன் பின்னரே, பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மற்றும் அது குறித்து ஆராய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மஹிந்த தேசப்பிரிய தனது சமூக வலைத்தளப்பக்கத்தின் ஊடாக இன்று (22) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதிக்குப் பின்னரே, தேர்தல் நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைளை இடைநிறுத்தி, கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயத்தை கருத்திற் கொண்டு செயற்படுமாறு, சகல அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டு பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“தமிழரின் காணி அபகரிப்பு” அரசின் கொள்கையல்ல

Tharani

சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் பர்ஸ்ட் லுக்

Bavan

இலங்கையர் எனும் கோத்தாபயவின் கருத்தை கஜேந்திரகுமார் நிராகரிப்பு

கதிர்

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.