செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

புன்னாலைக்கட்டுவன் வாள் வெட்டில் முதியவர் படுகாயம்!

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இன்று (17) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் குறித்த முதியவரின் வீட்டுக்கு சென்ற மர்மக் கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பலத்த காயத்திற்குள்ளன 62 வயது மதிக்கத்தக்க முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஆனந்தபுரத்தில் ரயில் மோதி ஒருவர் பலி!

G. Pragas

மண்மேடு சரிந்து ஒருவர் சாவு!

G. Pragas

296 பேர் நாடு திரும்பினர்!

G. Pragas