Uncategorized உலகச் செய்திகள் செய்திகள்

புயலில் சிக்குண்ட ஜப்பான்- இயல்பு நிலை பாதிப்பு.

ஜப்பான் தலைநகரை தாக்கிய டக்ஸியா புயலின் பாதிப்பு இன்னும் தாக்கம் செலுத்துகின்றது. பலத்த மழை பெய்வதுடன் மணித்தியாலத்திற்கு 210 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுகின்றது அத்துடன் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் புலட் ரயில்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

புயலினால் ஜப்பான் தலைநகரிலுள்ள சுமார் 2 90 000 வீடுகளுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண ரக்பி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட நாடு யப்பான் என்பது எல்லோரும் அறிந்ததே. இதனை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறு புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக போட்டியில் கலந்துகொள்ளும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில அணிகள், ஜப்பானுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

எவரையும் ஆதரிக்க முடியாது – மறத்தமிழர் கட்சி

G. Pragas

தாயை கொலை செய்தமை உறுதி; மகன், பேரனுக்கு விளக்கமறியல்

G. Pragas

பாலியல் குற்றச்சாட்டில் முன்னாள் சபாநாயகர் கைது

G. Pragas

Leave a Comment