இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு இன்றுடன் அகவை அறுபத்தெட்டு!

’மார்க்கெட் வால்யூ’ என்றொரு வார்த்தை, தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப் பிரபலம். எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும் வசூலைக் குவித்துவிடும் படங்களைத் தந்தவர்களை இப்படித்தான் சொல்வார்கள். எண்பதுகளில் தொடங்கி 2000 கடந்து, அப்படியொரு வசூல் மன்னனாகத் திகழ்ந்தவர்களில் மிக மிக முக்கியமானவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்.

80களின் இறுதியிலும் 90களின் ஆரம்பங்களிலும் இவரது படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

விஜயகாந்த் படமென்றால், புரட்சிகரமான கருத்துகள் இருக்கும். சட்டத்தின் ஓட்டைகள் சாடப்பட்டிருக்கும். தாயையோ, சகோதரியையோ கொன்றவர்களை பழிவாங்குவார். ஊருக்குத் துரோகம் செய்தவர்களை துவம்சம் செய்வார். அரசியல் முகமூடிக்காரர்களின் கொட்டத்தை ஒடுக்குவார் என்பதான கதைகள், விஜயகாந்தை பலதரப்பட்ட ரசிகர்களின் பக்கம் கொண்டுசென்றது.

சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் நுழைந்த விஜயகாந்துக்கு மக்கள் பெரும் ஆதரவு வழங்கியதால், ஒரு தடவை தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடிந்தது. அதன் பின், தற்போது அரசியலுக்கு சிறு ஓய்வு கொடுத்துள்ளார் விஜயகாந்த் என்றே சொல்ல வேண்டும்.

இன்றுடன் அவருக்கு அகவை அறுபத்தெட்டு. அவரை மீண்டும் அரசியலில் பார்க்க அவரது ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

Related posts

பெண் துஷ்பிரயோகம்; ஐமசுகூ உறுப்பினரும் சாரதியும் கைது!

G. Pragas

பூஜித் – ஹேசிறியின் விளக்கமறியல் நீடிப்பு

G. Pragas

இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது – பெரமுனவை கடுப்பேற்றிய ஹூல்

G. Pragas