in

புலவர் புலமைப்பித்தன் மறைந்தார்!

புலவர் புலமைப்பித்தன்  மறைந்தார்!

அ.தி.மு.க முன்னாள் அவைத்தலைவரும், கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் 85 ஆவது வயதில் இன்று காலை சென்னையில் காலமானார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் கடந்த 28 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புலமைப்பித்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாத் தொற்றால் வவுனியாவில் இரண்டு தினங்­க­ளில் 19 பேர் உயி­ரி­ழப்பு!

89 வயது மூதாட்டி எரித்துக் கொலை!